லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தை இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணி புரிந்தார். தாயார் மரியா உல்யானவ். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதரிகள். லெனினுடைய குடும்பம் கலப்பு இனத்தன்மை கொண்டது. இவரது மூதாதையர்கள் ரஷ்யர், மோர்டோவியர், கல்மியர், யூதர், வொல்கானிய ஜேர்மானியர், சுவீடியர் எனப் பலவிதமான இனப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் என இவரது வரலாற்றை எழுதியவரான டிமிட்ரி வொல்க்கோகோனோவ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார். சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள். நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான விசயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும் அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காக கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார். 1886 ஆம் ஆண்டு ஜனவரியில் மூளையில் ஏற்பட்ட நோயினால் லெனினின் தந்தையார் இறந்தார். 1887 மே மாதத்தில் லெனினுக்குப் 17 வயதாக இருக்கும்போது, ரஷ்யாவின் ஜார் மன்னனைக் கொல்வதற்கான சதிமுயற்சியில் பங்கு கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அலெக்சாண்டர் கைதானபோது அவருடன் இருந்த சகோதரி கிசானிலிருந்து 40 கிமீ தொலைவிலிருந்த கொக்குஷ்கினோ என்னும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார். இந்த நிகழ்வுகள் லெனினைத் தீவிரவாதி ஆக்கின. இவரது வரலாறுகள், லெனினது வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த தீவிரவாதப் போக்குக்கு இதையே அடிப்படையாகக் கூறுகின்றன. பிற்காலத்தில் கோடிக்கணக்கான ரஷ்யப் பாடநூல்களில் இடம்பெற்ற, நாங்கள் வேறு பாதையைப் பின்பற்றுவோம் என்னும் தலைப்பிட்டு, பியோட்டர் பெலூசோவ் என்னும் ஓவியர் வரைந்த புகழ் பெற்ற ஓவியத்தில் லெனினும் அவரது தாயாரும் அலெக்சாண்டரின் இழப்புக்காகத் துயரப்படுவது காட்டப்பட்டுள்ளது. அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.
[தொகு]அரசியல் ஈடுபாடு
லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்ட லெனினும் மாணவர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டார். இதனால் லெனின் பின்னர் கைது செய்யப்பட்டார். இவரது அரசியல் கருத்துக்களுக்காக இவர் பல்கலைக் கழ்கத்திலிருந்தும் விலக்கப்பட்டார். எனினும் படிப்பை அவர் தனிப்பட்ட முறையில் தொடர்ந்தார். ஜார் ஆட்சியின் கொடுமைகளை அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்ட லெனின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். லெனினுக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்கான அனுமதி கிடைத்தது. அங்கே சட்டம்பயின்ற அவர் 1891 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். 1892 ஆம் ஆண்டு ஜனவரியில் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேறிப் பட்டம் பெற்றார். இவர் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்ததோடு, ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றையும் ஓரளவு கற்றிருந்தார். எனினும் பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது பயிற்சி குறைவாகவே இருந்தது. அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார். லெனின் பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார். அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது.
[தொகு]லெனின் தேர்வு செய்த பாதை
லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே நடத்தினார். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில் தொழிலாளர்கள் மிக வறியச் சூழலில் வாழ்ந்தனர். ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார் லெனின். அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். ஏராளமாகப் படித்தார். அப்படித் தான் அவர் கார்ல் மார்க்ஸ்என்பவர் எழுதிய மூலதனம் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. லெனினை அந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்தது. மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம். மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர். உழைப்பாளிகளுக்கோகூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம், சிறைச்சாலை, சட்டம்போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர். இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது. வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.உழைக்கும் மக்கள் ஒரு புரட்சியின் மூலம் பழைய அரசையும், அநீதியான சட்டங்களையும் வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளிவர்க்கத்திற்கான புதிய அரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்.இதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தக் கருத்துக்கள் கம்யூனிச தத்துவம் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக கார்ல் மார்க்சும் அவருடைய நண்பர் ஏங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து முடித்தார். அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட தொழிலாளர்களின் புரட்சி ஒன்றுதான் வழி என்று தீர்மானித்தார். அந்தப் புரட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதிலிருந்து கம்யூனிஸ்டாக மாறினார்.
கம்யூனிசப் பிரசாரம்
லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம் மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார். இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாக கூட்டம் நடத்தினால் ஜாரின் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.லெனினுடைய பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய கருத்துக்கள் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்கள் அனைவரையும் சென்று அடைந்தன. தொழிலாளர்கள் மெதுவாக விழிப்புணர்வு பெற்றனர். தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்ட வேண்டியிருந்தது. கூலியோ மிகமிகக் குறைவு. இதற்கெதிராகப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.இந்த போராட்டங்களை வழிநடத்தும் தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள இயலாமல் ஜார் அரசு மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது. லெனின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை கையும் களவுமாகப் பிடிக்க ஏராளமான உளவாளிகள் அவரைப் பின்தொடரத் தொடங்கினர். லெனின் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார். வலிமையான உடற்கட்டும் புத்திக் கூர்மையும் இதற்கு உதவின. ரயிலில் செல்லும்போது அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும். ரயில் நிற்கும். ஆனால் அவர் இறங்கமாட்டார். கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்து படிப்பது போல் இருப்பார். ரயில் கிளம்பி வேகமெடுக்கும். அப்போது அவர் மிக விரைவாக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிப்பார். ஒரு கணநேரத்தில் மாயாஜால வித்தை போல தங்கள் கண்ணெதிரே லெனின் தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். இதுபோல் பலமுறை உளவாளிகள் ஏமாந்து போனதுண்டு.
[தொகு]சைபீரியச் சிறைவாசம்
1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அதிகாரிகள் அவரைப் 14 மாதங்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் தடுப்புக்காவல் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அங்கிருந்து விடுவிக்கப்பட்ட லெனின் சைபீரியாவில் உள்ள சுஷென்ஸ்கோயே என்னும் ஊருக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவருக்கு, ரஷ்யாவில் சோசலிசத்தை அறிமுகப்படுத்திய ஜார்ஜி பிளெக்கனோவ் போன்ற குறிப்பிடத்தக்க மார்க்சியவாதிகளின் அறிமுகம் கிடைத்தது. 1898 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் லெனின் தான் காதலித்த நடேஷ்டா கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத் திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு. சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள் எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும் புத்தகங்கள். ரஷ்யாவின் முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்னும் நூலொன்றையும் அவர் எழுதி வெளியிட்டார். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த முடியாது. அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிக்கையை வெளியிட முடிவு செய்தார். பத்திரிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில் கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சியை வழி நடத்தமுடியாது.1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.
[தொகு]முதல் ரசியப் புரட்சி
லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிகையை நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி காட்டியது. அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன. கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது.தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்.1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர். ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன.பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர்கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் தலைமை ஏற்க பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும் முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப்படுத்தினார். தோல்வியில் இருந்து பாடம் கற்போம்.தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன் படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும் ஆபத்தான வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார். அது குளிர் காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டிப்பாளமாக மாறியிருந்தது. கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த நேரத்தில்தான் லெனின் துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது நடந்து செல்வதே அம்முடிவு.அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக மெல்லியதாக இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே நடுக்கடலில் விழுந்தால் மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும் பனிப்புயலும் வீசிக் கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாது கடல் மீது நடக்கத் தொடங்கினார்.
அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச் கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம் கடந்துவிட்டனர்.அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. லெனின் கால் வைத்த இடத்தில் இருந்த பனிப்பாளம் உடைந்தது. அவர் தொப்பென கடலுக்குள் விழுந்தார். உள்ளே எலும்பை உறைய வைக்கும் குளிர். உடையின் பாரம் கீழ் நோக்கி இழுத்தது. லெனினுடைய உறுதியான உடல் போராடியது. இறுதியாக உடைந்த பனிப்பாளத்தின் விளிம்பை பிடித்தார். மேலே நின்று கொண்டிருந்த மூன்று தோழர்களும் கை கொடுத்து தூக்கி விட்டனர். லெனினுடைய மன உறுதிக்கு இது மேலும் ஒரு சான்று.
[தொகு]போல்ஷ்விக்குகள் மீது அடக்குமுறை
1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினுடைய குடும்பமும் சித்திரவதைக்கு உள்ளானது. இந்தத் தாக்குதல்களிக்குப் பயந்து கம்யூனிஸ்ட் கட்சியை கலைக்கும்படி சிலர் கூறினர். இந்தக் கோழைகளுக்கு லெனின் சரியான பதிலடி கொடுத்தார். புரட்சியில் தொழிலாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே அதற்கு வழிகாட்ட முடியும் என்றும் சான்றுகளுடன் நிரூபித்தார். தொழிலாளர்களின் மனக்கலக்கத்தைப் போக்கினார். மீண்டும் அவர்களை அணிதிரட்டினார். இதே நேரத்தில் ஏகாதிபத்திய நாடுகள் உலகப் போருக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தன. பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா முதலிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைத் தம் அடிமையாக (காலனியாக) வைத்திருந்தன. இந்த நாடு பிடிக்கும் போட்டியில் தாமதமாக குதித்தன ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி முதலிய நாடுகள். இவை பழைய ஏகாதிபத்தியங்களிடம் உலகைப் பிரித்து தமது பங்கைக் கொடுக்குமாறு கேட்டன. இக்கோரிக்கை மறுக்கப்பட்டது உலகை ஏற்கெனவே கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு ஒருபுறமும், புதிதாக கொள்ளையடிக்கப் புறப்பட்ட ஜெர்மனி முதலான நாடுகள் மறுபுறமாக 1914-ஆம் வருடம் போரில் ஈடுபட்டன. இதுவே முதல் உலகப் போரானது. இதில் ரசியா, பிரிட்டனை ஆதரித்து ஜெர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தது.
[தொகு]ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி
லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர் என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டிப் பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள். தொழிலாளர்களுக்கு இதில் நன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போரில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நேரிடும். இதற்கு பதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டு முதலாளிகளுடன் போரிட்டால், தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதிரிதான் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கைகோத்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்ய வேண்டும் என்று லெனின் கூறினர்.ஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவிரித்தாடியது. எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டையிட்டு மடிந்து கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோ போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.லெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்ற மக்கள் புரிந்து கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும், தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின் கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சி வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார். பெத்ரோகிராடு தொடர்வண்டி நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள் ஓடோடி வந்திருந்தனர்.
[தொகு]சதியை முறியடித்த லெனின்
ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார். தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் சாரை வீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை. சாரின் அதிகாரத்தை முதலாளிகளும், பண்ணையார்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதரிப்பார்கள். பிற நாடுகளைக் கொள்ளையடிக்கப் போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு. தொடர்ந்து முன்னேறுங்கள் என்று அறைகூவினார்.
லெனினுடைய வார்த்தைகளை நம்பிய தொழிலாளர்கள் சிறுபான்மையினராகவே இருந்தனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. புதிய அரசு போரில் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும் ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர். லெனினுடைய கருத்துக்களே சரியானவை என ஏற்கத் தொடங்கினர்.மக்களை ஒடுக்குவதற்காக புதிய அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. லெனினைக் கொலை செய்யும்படி படைகளுக்குக் கட்டளையிடப்பட்டது. மீண்டும் ஒரு முறை லெனின் தலைமறைவாகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்தமுறை அவர் பெத்ரோகிராடை விட்டு வெகுதூரம் செல்லவில்லை. எப்படியும் புரட்சி வெடிக்கும் என்று நம்பினார். அதனால் பெத்ரோகிடின் அருகிலேயே தங்கினார்.புல் அறுப்பவராக, கூலி உழவராக, ஓட்டுநராக எனப் பல வேடங்கள் பூண்டு வெவ்வேறு இடங்களில் தங்கினார். ஹெல்சிங்கி நகரில் லெனின் தங்கியிருப்பதாக அரசு சந்தேகப்பட்டது. அந்நகரின் மூலைமுடுக்குகளெல்லாம் வலைவீசித் தேடியது. ஒரு இளம் காவல் துறை அதிகாரியிடம் லெனினைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், அந்த அதிகாரியின் வீட்டில் லெனின் பாதுகாப்பாகத் தங்கியிருந்தார். ஒரு தொழிலாளியின் மகனான அந்த இளம் காவல் அதிகாரி கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்.மக்களின் கோரிக்கைகளான போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம் போன்றவற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே செயல்படுத்த முடியும் என மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர். இரசியாவெங்கும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. புரட்சிக்கான காலகட்டம் நெருங்கிவிட்டது என லெனின் உணர்ந்து கொண்டார். உடனடியாகத் தொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் கட்சி அதற்குத் தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் கூறியதைக் கட்சியின் மையக் குழு ஏற்றுக் கொண்டது.ஆனால் மையக்குழுவில் இருந்த பயந்தாங்கொள்ளிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர். அதுமட்டுமல்ல, மிகக் கமுக்கமான இந்தத் திட்டத்தை செய்தித்தாள்களிடம் வெளிப்படுத்தி இரண்டகம் செய்தனர். ஆகவே திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாளுக்கு முன்பாகவே நவம்பர் 7-ஆம் தேதி புரட்சியைத் தொடங்க முடிவு செய்தார் லெனின். இத்தகவல் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்களுக்குக் கமுக்கமாகக் கொண்டு செல்லப்பட்டன.
[தொகு]நவம்பர் புரட்சி
1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாகச் சுரண்டல் ஒழிக்கப்பட்டது அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வருக்க அரசு அமைக்கப்பட்டது. அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். தொடர்வண்டி நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வருக்க அரசு அமைக்கப்பட்டது. இரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசுத் தலைவரானார்.ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். இரசியாவின் அனைத்து நிலங்களும் வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.
உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிருவாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிருவாகக் குழு உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிருவாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி முறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே அனைத்து அதிகாரம் படைத்தவர்கள். தொழிற்சாலைகளின் நிருவாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை தனிப்பட்ட முதலாளிகளின் இலாபத்திற்காகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வேலை வழங்கப்பட்டது. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் நொடியில் மறைந்தது.நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனத்தில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாடக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமைகளின் வளரச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.அதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. சார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.தொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக முன்னேறியது.பொருளாதார சீரைமைப்பு வெகுவாக அமல் படுத்தப்பட்டது.
[தொகு]உள்நாட்டுப் போரும் வெளிநாட்டுத் தலையீடும்
இரசியாவில் நாடு தழுவிய கிளர்ச்சிகள் ஏற்பட்டன. பல வகையான அரசியல் இயக்கங்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ஆயுதங்களை எடுத்துப் போராடினர். சிலர் சோவியத் அரசுக்கு ஆதரவாகவும் வேறுசிலர் அவ்வரசை வீழ்த்தும் நோக்கிலும் போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும் முக்கியமான இரண்டு பிரிவுகள் கம்யூனிஸ்டுகளின்செம்படைகளூம், மரபுவாதிகளான வெண்படைகளும் ஆகும். அமெரிக்கா, பிரித்தானியா,பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளும் சோவியத்துக்கு எதிராக வெண்படைகளுக்கு ஆதரவு நல்கினர். இரசியப் புரட்சியால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் போன்று ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஏழைகளைக் கடுமையாகச் சுரண்டினார்கள். சோவியத் யூனியனைப் பார்த்துத் தங்கள் நாட்டு மக்களும் புரட்சி செய்வார்கள் என்று பயந்தனர். இப்படிப்பட்ட சூழலில் சோவியத் யூனியனே, இவர்கள் இந்தியா போன்ற நாடுகளை அடிமையாக (காலனி) வைத்துக் கொள்ளையடித்ததை எதிர்த்தது. ஆகவே அதை ஒழித்துக் கட்ட முடிவு செய்தனர்.எதிரிகளின் படைகள் சோவியத் யூனியனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டன. தலைநகரத்தை நோக்கி வேகமாக முன்னேறின. பிடிபட்ட இடங்களில் எல்லாம் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஏழை உழவர்களும், தொழிலாளர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டது. குழந்தைகள் கூட ஈவு இரக்கமின்றி சுடப்பட்டனர். உழவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவை பழைய பண்ணையார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல் தொழிற்சாலைகளில் முதலாளிகளின் சுரண்டல் மீண்டும் தொடங்கியது.விரைவில் தலைநகரைக் கைப்பற்றி லெனினைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினர், எதிரிகள். அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் இரசியாவைப் பங்கு போட்டுக் கொள்வதைப் பற்றி வெளிப்படையாகப் பேரங்கள் நடத்திக் கொண்டு இருந்தன. உலகின் முதல் சோசலிச நாடு அழிந்து விடுமோ என்ற அச்சம் உலக மக்களைக் கவ்விக்கொண்டது.இந்த அபாயகரமான சூழலில் லெனின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சோசலிச தாய்நாடு ஆபத்தில் இருக்கிறது. தொழிலாளர்களே, விவசாயிகளே நாட்டைப் பாதுகாக்கப் படையில் சேருங்கள்.எதிரிகள் வெற்றி பெற்றால் சோசலிசப் புரட்சி அளித்திருந்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என்று இரசிய உழைக்கும் மக்கள் புரிந்துக் கொண்டனர். அவர்கள் மீண்டும் பழையபடி வறுமையில் வாட விரும்பவில்லை. தங்களின் விடுதலையைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் படையில் சேர்ந்தனர். அது செம்படை என்று அழைக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் படையில் சேர்ந்தனர்.உக்கிரமான போர் தொடங்கியது. செம்படையை விட எதிரிகளிடம் பெரிய படை இருந்தது. நவீனமான ஆயுதங்கள் இருந்தன. ஏகாதிபத்தியங்கள் போரில் வெற்றி பெறப் பணத்தை வாரி இறைத்தன. எதிரிகள் டாங்குகள், பெரிய பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் தூப்பாக்கிகள், போர்விமானங்கள்,போர்க்கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கினர். செம்படையிடமோ பழங்காலத்து துப்பாக்கிகளும் கத்திகளும்தான் இருந்தன. ஆனால் அவர்கள் மன உறுதியுடனும், வீரத்துடனும் போரிட்டனர். அந்த மன உறுதியை மக்களுக்கு ஊட்டியவர் லெனின். செம்படையினர் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் போரிட்டனர் எதிராளிகளிடம் இத்தகைய ஒழுங்கமைவு காணப்படவில்லை இதனால், லியொன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் போரிட்ட செம்படையினர் 1920 ஆம் ஆண்டு எதிராளிகளைத் தோற்கடித்து வெற்றிபெற்றனர். எனினும் ஆங்காங்கே சிறுசிறு குழப்பங்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடந்துவந்தன. வெளிநாட்டுத் தூண்டுதல்களுடன் நடந்த இந்த உள்நாட்டுப் போரில் இரு பகுதியினருமே முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குக் கொடுமைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. கும்பல் கும்பலாக மக்கள் கொலை செய்யப்பட்டனர். போர்களுக்கு இடையே பஞ்சங்கள், தொற்றுநோய்கள் என்பவற்றினாலும் இலட்சக்கணக்கான மக்கள் இறந்துபோயினர்.
வெண்படைகளுக்கும் அதன் வெளிநாட்டு, உள்நாட்டுக் கூட்டாளிகளுக்கும் எதிரான போரில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 1919ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கம்யூனிசப் புரட்சியை மேற்குநாடுகளுக்கும் பரவலாக்க லெனின் விரும்பினார். இதற்காக வன்முறையைப் பயன்படுத்துவதற்கும் அவர் தயாராக இருந்தார். புதிதாக விடுதலைபெற்ற இரண்டாவது போலிஷ் குடியரசு, 18 ஆம் நூற்றாண்டில் போலந்துப் பிரிவினைக்குப் பின்னர் ரஷ்யாவுடன் இணக்கப்பட்ட போலந்தின் கிழக்குப் பகுதிகளை வசப்படுத்திக்கொள்ளத் தொடங்கியது. அது இப் பகுதிகளில் போல்ஷெவிக்குகளுடன் சண்டைகளில் ஈடுபட்டது. இது போலந்து-சோவியத் போருக்கு வித்திட்டது. ஜேர்மனியில் ஏற்பட்ட புரட்சி, மேற்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்தைப் பரப்புவதற்காக சரியான வேளை அதுவே என எண்ணத்தூண்டியது. சோவியத்தையும், ஜேர்மனியிலுள்ள கம்யூனிச ஆதரவாளர்களையும் இணைப்பதற்கும் அதன் மூலம் ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளில் கம்யூனிசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் பாலமாகப் போலந்தை லெனின் கணித்திருந்தார். எனினும், சோவியத்-போலந்துப்போரில் தோல்வியடைந்ததனால் சோவியத்தின் இந்தத் திட்டம் பயனற்றுப் போயிற்று.
லெனின் ஏகாதிபத்தியத்தின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தார். 1917 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மை இனங்களுக்கும், அடக்கப்பட்ட நாட்டினங்களுக்குமான நிபந்தனை எதுவுமற்ற பிரிந்துபோகும் உரிமையை அறிவித்தார். எனினும் உள்நாட்டுப் போரை அடக்கியபின், புதிதாக விடுதலை பெற்ற ஆர்மீனியா, ஜார்ஜியா, அசர்பைஜான் ஆகிய நாடுகளை படைப்பலத்தைப் பயன்படுத்தி, சோவியத்துடன் இணைத்துக் கொண்டார். இவ்வாறு இணைத்துக்கொண்டது, அந் நாடுகளை முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கே என அவர் வாதிட்டார்.
[தொகு]லெனினைக் கொல்ல முயற்சி
லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.ஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்த பின் அரங்கத்தை விட்டு வெளியேறி வந்தார். அப்போது அவர்மீது துப்பாக்கியால் சுட்டனர். மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்டவனை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம்வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதற்றப்படாமல் தானே நடந்து சென்று வண்டியில் உட்கார்ந்தார். அவருடைய உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விடக்கூடிய ஆபத்துக் குறித்துமருத்துவர்கள் பயந்தார்கள். உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டது. தங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக்கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளைப் பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர்.
[தொகு]பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்
போரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க லெனின் அமைச்சரவையைக் கூட்டினார். அந்தக் கூட்டம் நடந்து கொண்டு இருந்த போதே உணவுத்துறை அமைச்சர் மயங்கி விழுந்தார். காரணம் அவர் கடந்த எட்டு நாட்களாக ஒரு வாய் உணவு கூட அருந்தவில்லை. தன் கட்டுப்பாட்டில் இருந்த உணவை குழந்தைகள், நோயாளிகள், பெண்கள், முதியவர் ஆகியோருக்கு வழங்கினார். நாட்டு மக்கள் வயிறார சாப்பிடும் போதுதான் தானும் வயிறாரச் சாப்பிடப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார். சோசலிச சோவியத் யூனியனில் மந்திரிகள் அப்படித்தான் இருந்தனர்.அந்தத் தோழர் மட்டும் அல்ல லெனினும் பலநாள் பட்டினி தான். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. சோசலிசத்தைப் பாதுகாக்க இரவு பகலாக உழைத்தார். அவர் இராணுவத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. உணவுப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியிருந்தது. கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டம் இடுதலை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்தை நோக்கி நாட்டை வழி நடத்த வேண்டியிருந்தது. உள்ளுக்குள் இருந்து சதி செய்த சதிகாரங்களை களையெடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றின. அனைத்தையும் லெனினே முன்னின்று தீர்க்க வேண்டியிருந்தது.தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் லெனினைத் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் மன்றமான சோவியத்தை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்று அவரிடம் கேட்டு அறிந்தனர். அவர் ஒரு நாளைக்கு இருபத்திரண்டு மணி நேரம் உழைத்தார். இந்தக் கடினமான உழைப்பினாலும், உணவுப் பற்றாக்குறையாலும் லெனினுடைய உடல்நிலை மோசமடைந்தது.
[தொகு]மக்களின் மகத்தான தலைவர் லெனின்
லெனின் பட்டினி கிடப்பது கிராமங்களில் இருந்த மக்களுக்கு தெரிய வந்தது. அதேநேரத்தில் அவருடைய பிறந்த நாளும் நெருங்கியது. லெனினுக்கு உழவர்கள் பரிசளிக்கத் தங்களால் இயன்ற உணவுப் பொருட்களைத் திரட்டினார்கள். ஆனால் தலைநகர் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. உழவர்களின் பிரதிநிதிகள் காட்டு வழியே நடந்தனர். எதிரியின் வளையத்தை தந்திரமாக உடைத்துக் கொண்டு தலைநகரை அடைந்தனர்.
ஏராளமான உணவுப் பொருட்கள் அவர் வீட்டின் முன் குவிந்தன. லெனின் உழவர்களுக்கு நன்றி சொன்னார். ஆனால் உணவுப் பொருட்களைத் தொடவில்லை. பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு அவற்றை வழங்கும்படி உத்தரவிட்டார். தான் எப்போதும் சாப்பிடுவதும் போல கால் வயிறு கூட நிரம்பாத அளவுக்கு உப்புச்சப்பற்ற கஞ்சி குடித்தார்.லெனினுக்கு பரிசாக வந்த உணவுப் பொருட்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காத்தன. அனைத்தையும் விட குழந்தைகளின் நலனே முக்கியமானது என்ற லெனின் அடிக்கடி கூறுவார் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி செய்ததும், அதைப் பாதுகாக்க போர் செய்வதும், எதிர்காலத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகத்தான் என்பதை அடிக்கடி நினைவுபடுத்துவார். கடும் பஞ்சத்திலும் போருக்கும் நடுவே ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. குழந்தைகள் அறிவாளிகளாக வளர்க்கப்பட்டனர். கல்விமுறை ஜனநாயகப்படுத்தப்பட்டது. மனப்பாடக் கல்வி ஒழிந்தது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் கல்வி மலர்ந்தது. வளமான வருங்காலத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. கடின காலம் மெதுவாக அகலத் தொடங்கியது. விவசாய உற்பத்தியும், தொழில் உற்பத்தியும் பெருகியது. இதே நேரத்தில் போர் முனையில் இருந்து வெற்றிச் செய்திகள் குவியத் தொடங்கின உழைக்கும் மக்கள் காட்டிய வீரத்தின் முன் எதிரிகள் கூலிப்படை தோற்று ஓடியது. 21 நாடுகளின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் பிரான்சும் தோற்றன.ஆனால், இந்த வெற்றி சாதாரணமாக கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள் போர் நடந்தது. முப்பது லட்சம் செம்படை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
[தொகு]லெனினும் சிவப்பு வன்முறையும்
அக்டோபர் 1917 போல்ஷவிக்கு புரட்சி பிறகு, கம்யூனிஸுடு எதிர்ப்பாளர்கள் `வெள்ளை இயக்கம்` என அழைக்கப் படும் இயக்கத்தில் செயல்பட்டனர். 1918ல், `வெள்ளை இயக்கத்தினர்` புதிதாக ஆக்கப்பட்ட ரஷ்ய சோசோகு க்கு எதிராகாரஷ்ய உள்நாட்டு போரை துவங்கினர். அது பலரை கைது செய்து, சுட்டது. அதனால், அது `வெள்ளை வன்முறை` என அழைக்கப் பட்டது. சிவப்பு வன்முறை வெள்ளை வன்முறைக்கு பதிலாக ஆரம்பிக்கப் பட்டதாக கம்யூனிஸ்டுகள் சொன்னர்கள். லெனின் மேல் கொலை முயற்சியை அடுத்து, ஸ்டாலின் கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பகிரங்க, பாரிய வன்முறையை ஆரம்பிக்க வேண்டும் என கோரினார்.. மற்ற போல்ஷெவிக்குகளும் அதற்கு உடன்பட்டு, 1917ல் லெனின் ரகசிய போலீஸ் சேகாவின் தலைவராக நியமித்த ஃபீலிக்ஸ் டிசெர்சின்ஸ்கியை , `சிவப்பு வன்முறை`யை தொடங்குமாறு கேட்டுக் கொண்டனர்; அது கம்யூனிஸ்டு பத்திரைகையில் செப்டம்பர் 1, 1918ல் வெளியிடப்பட்டது.[1] . சில வரலாற்று ஆய்வுகள்படி, துப்பாக்கி ரவை அடியினால் படுத்திருந்த லெனின் .[2], “ரகசியமகவும், துரிதத்துடனும், சிவப்பு வன்முறையை தயார் செய்ய வேண்டியுள்ள்ளது” என ஆணை இட்டாராம்.ரிசர்டு பைப்ஸ் என ஆய்வாளர் படி லெனின் 11 ஆகஸ்து 1918 அன்று வன்முறையை தொடங்க உத்தரவிட்டார். அது `லெனினின் தூக்கு ஆணை` என அறியப் படுகிறது.[3].
சேகா ஈவிறக்கம் இன்றி மற்றவர்களை கொன்றது என்று வரலாறு ஆசிரியர் ராபர்ட் கெலேட்லி தனது நூல் “லெனின், ஸ்டாலின்,ஹிட்லர்” இல் கூறியுள்ளார்[4]. சந்தேகிக்கப்பட்ட நபர்கள் தீவிர சித்திரவதை, கம்படி, சுடப்படுதல், உடல் ஊனமாக்குதல் இவற்றை எதிபார்க்கலாம். சிலர் சுட்டு தள்ளப் பட்டனர்".[5], மற்றவ்ரக்ள் நீரில் மூழ்கப்பட்டனர், குளிரில் உறையப்பட்டனர், அல்லது கத்தில்யால் வெட்டப்பட்டனர்,மேலும் கொல்லப்பட்டவர்கள் தங்கள் சாவுகுழிகளைதாங்களே தோண்ட வேண்டியிருந்தது.பல சரிதிர ஆய்வாளர்கள் சிவப்பு அட்டுழியங்களை பற்றி படித்து ஆவணம் செய்துள்ளனர். .[6][7][8] [9]
சோவியத் அரசால் பிரசுரிக்கப் பட்ட ஒரு சுட்டு தள்ளல் புள்ளி விவரம், சேகாவினால் கொடுக்கப்பட்டது. அது ரஷ்ய சோசோகு பகுதியில் 1918-20 காலத்திற்கு மொத்தம் 12,,733 எனவும், அதில் 3082 பேர் கலத்தில் பங்கு எடுத்தனர், 2024 எதிர்-புரட்சி அமைப்புகளில் அங்கம் வகித்தனர் என்றும், 643 ரௌடிகள் என்றும், 455 புரட்சிக்கு ஊக்கு கொடுத்தனர் என்றும், 206 ஊழல் காரர்கள் எனவும், 102 உளவினர் என்வும், 102 பேர் ராணுவத்தை கைதுறந்தவர் எனவும் சுடப்பட்ட்னர்[10]. இந்த புள்ளி விவரங்கள் உண்மைக்கு மிகக் குறைவான மதிப்பீடு என நம்பம் படுகிரது. ஏனெனில் இது போர் பகுதிகளான கிரைமியாவையும், யுக்ரெயினையும் அடக்க வில்லை[11]. அப்பிர்தேசங்களில் ஜெனெரல் ரேங்கல்எனப்படும் கலகக் காரரின் கலகம் தடைவிதி செய்யப் பட்ட பிறகு 50,000 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்[12]. சில சரித்திர முனைவர்கள் கணக்குப் படி 1917-22 காலகட்டத்தில் 280,000 பேர் சேகாவினால் கொல்லப் பட்டனர், அதில் பாதி திடீல் சுட்டுக் கொல்லப்பட்டனர், மறு பாதி கலகம் அடக்கும் போது கொல்லப் பட்டனர்[13] .[14] . பேரா.ரும்மல் லெனினை 40 லட்சம் அகால மரணங்களுக்கு பொறுப்பாளி ஆக்குகிறார்[15] . கம்யூனிசத்தின் கருப்பு நூல் படி[16] , மே 1919` 16,000 ஜார் காலத்திய கடோர்கா என அழைக்கப் படும் பணி முகாம்களில் இருந்தனர். அது செப்டம்பர் 1921ல் 70000 ஆயிற்று. இந்த முகாம்களின் மிக மோசமான நிலைகளினால் இறப்பு வீதம் அதிகமக இருந்தது, அங்கு பல படுகொலைகள் செய்யப்பட்டன[17] . சில சமயம், மொத்த முகாம் வாசிகளும் சுட்டு கொல்லப்பட்டனர், ஏனெனில் அப்பொது `வெள்ளை படையினர் அப்பகுதியில் வெற்றி பெறுவர் என வாய்ப்பு இருந்தது[18][19] .
பேரா.ஒர்லாண்டோ பியுக்படி லெனின் பொதுவாக பயங்கர அடக்கு முறைகளை புரட்சிக்கு எதிர்ப்பு கொடுப்பவர்கள் மீது தொடுக்க ஆவலாயிருந்தார்.[20] ; மேலும் பிராலடேரியன் தேசம் - அதாவது தொழிலாளர் தேசம் என்பது முதலாளித்துவவாதிகள் மீது பாரிய வன்முறையை செலுத்துவதாகும் என்பதில் உறுதியாக இருந்தார்.. காமனேவ்,புகாரின் போன்ற தலைவர்கள் செகாவின் மிகை வன்முறையை அடக்க முயன்ரபோது, லெனின் சேகாவிற்கு ஆதரவு கொடுத்தார்[21] . 1921ல், லெனின் தலைமையில் இருந்த அரசு கூட்டம், சேகாவின் மரண தண்டனை வரைகளை அதிகமாக்கியது[22] .
பேரா.ரிசர்டு பைப்ஸ்படு லெனின் பயங்கர வன்முறை அடக்கு முரைகளை ஆதரித்தவர். ஷூயா எனும் நகரில் சில மத குருக்கள் கலகம் செய்தனர், அதனால் மார்ச் 19, 1922 மடலில் , லெனின் அரசு ஆணைப்படி தேவாலயங்களின் உடைமைகளை தராத மதகுருக்கள் மீது பயங்கரமான அட்டுழியங்களை திட்டமிட்டார். ”நம் எலா மத பூசாரிகள் எதிர்ப்புகளையும் ஆணித்தரமாக அடித்தொழித்து, அதை அவர்கள் பல சதாப்தங்களுக்கு மறக்கக் கூடாது. இன்னும் அதிக எண்ணிக்கையில் மதகுருக்க்ளையும், பூர்ஷ்வாக்களையும் மரணத்திற்கு அனுப்புவதே மேல்”[23] . அதனால் அந் நகரில் 2691 பூசாரியர், 1962 துறவிகள், 3447 பெண் பூசாரிகள் லெனின் ஆனைக்கு நேரடியாக சுட்டுக் கொல்லப் பட்டனர்[24] [25]. 1980ல் கொர்பச்சாவின் “ஜனாதிபதியின் அரசியல் அடக்கு முறைகளில் பலியானவர்களின் நினைவு கமிடி’ தலைவர் அலெக்சாண்டர் யாகாவ்லேவ், படி 1918ல் மட்டுமே 3000 சுட்டுக்கொல்லப் பட்டனர். அவர்படி “லெனின் சர்வதேச நீதிகள்படி மானுடத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்தவர் என குற்ற, சாட்டப் படலாம்`.[26] [27]
செப்டம்பர் 1918, சிவப்பு வன்முறை போது 25 முன்னாள் ஜாரின் மந்திரிகள், உயர் அதிகாரிகள், மற்றும் 765 `வெள்ளை காப்பாளர்` என சொல்லப் பட்டவரக்ள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் மரண ஆணையை லெனினே கையெழுத்திட்டார். டைம் மாகசீன் கட்டுரை படி லெனின் வாரிசுகள் ஸ்டாலின், மாவோ, ஹிட்லர், போல்-போட்ஆவர்]][28].
உள்நாட்டு போர் போது, அட்டூழியங்கள் இரு தரப்பினராலும் செய்யப் பட்டன[29] . சிலர் `வெள்ளை வன்முறை` `சிவப்பு வன்முறை` அளவு இருந்தனர் என்கிறனர்[30] . ஆனால் பல சரித்திர ஆசிரியர்கள் இரு அட்டுழியங்களும் ஒரே அளவல்ல[31] ; `வெள்ளை வன்முறை` தனிப்பட்ட ராணுவ தளபதிகளால் செய்யப் பட்டது, மேலும் அவை சொந்த பழி தீர்ப்புகளீனால் ஏற்பட்டவை[32]; ஆனால் `சிகப்பு வன்முறை` அரசின் கொள்கை - அதை எல்லா அரசு ராணுவ தளபதிகளும் நிறைவேற்ற கடமை பட்டவர்கள்[33] . லெனின் தன் ராணுவ தளபதிகளுக்கு அனுப்பிய தந்திகளில், ஈவு, இரக்கமற்ற அட்டூழயங்களை செய்ய்மாறு தூண்டினார். அவர் தந்திகள் வன்முறை, நாடு பிரஷ்டம், சுட்டு கொலைஇவற்றை கேட்டு தேவை ஆக்கின உதாரணமாக ஆகஸ்து 9, 1918 அன்று நிழ்னி-நோவ்கோராட் நகரத்தில் இருந்த தன் தளபதிக்கு அனுப்பிய தந்தியில் “நீ, மார்கின், முதலியவர்கள் கூட்டு செர்ந்து பொது பயங்கர வாதத்தை அனுஷ்டித்து, நூற்றுக் கணக்கான வேசிகளை சுட வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும், ஏனெனில் அவர்கள் பல ராணுவ வீரர்களை குடி போதைக்கு உள்ளாக்கி விட்டர்கள். நேரத்தை விரயமக்க வேண்டாம்.... ..........இப்பொழுதே செய்வோம், பொது தேடல்கள், ஆயுதங்களை ஒளித்து வைப்பதற்கு சூடுகொலை, மென்ஷவிக்குகளை நாடு கடத்துதல்[34] .”. சிலர் லெனினை பிரெஞ்சு புரட்சி பயங்கரவாதி ரோப்ஸ்பியருக்கு ஒப்பிட்டனர்]]."[35]
[தொகு]லெனினின் இறுதிக் காலம்
போருக்கு பிறகு நாட்டைச் சீர்படுத்தும் முயற்சி தொடங்கியது சோசலிசத்தைத் துணையாகக் கொண்டு இதற்கான திட்டத்தை லெனின் தீட்டினார். நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தோன்றின. புதிய நகரங்கள் எழுந்தன. உற்பத்தி பல மடங்கு பெருகியது. நிலைமை சீராகத் தொடங்கியது இந்த நேரத்தில் லெனின் கடுமையாக நோய் வாய்ப்பட்டார் படுத்த படுக்கை ஆனார். ஓய்வறியாத உழைப்பே இதற்கு காரணம். அவர் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது, வேலை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தான் இதுவரை செய்த வேலையை இனி யார் செய்வார் எனக் கவலைப்படத் தொடங்கினார். ஆனால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. லெனினுடைய நெருங்கிய தோழரான ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லெனினுடைய திட்டங்களை முறையாக அமல்படுத்தினார். லெனினைப் போலவே உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்தார். விரைவிலேயே உலகின் முதல் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் யூனியனை மாற்றினார். ஸ்டாலினுடைய வேலைகள் லெனினுக்கு மன நிம்மதியைக் கொடுத்தன. ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமானது. கை, கால்கள் செயலிழந்து விட்டன. ஒவ்வொரு உறுப்பாக வேலை செய்வதை நிறுத்தியது. அவருடைய உடல்நிலை சீரடையும் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மரணம் அடைந்தார். அவருடைய உடல் முதல் முறையாக ஓய்வு கொண்டது. இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.சோவியத் மக்கள் ஒரு முடிவு எடுத்தனர். உலகின் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய லெனினது உடலை அழியவிடக்கூடாது. சோவியத் அறிவியலாளர்கள் ஒன்றுகூடி விவாதித்தனர். வேதிப்பொருட்களின் உதவியுடன் ஒரு கண்ணாடிப் பேழையில் அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தனர். நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அவரது உடல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அகற்றப்பட்டது. எனினும் உலக வரலாற்றில் லெனினது பெயர் நிலைத்து நிற்கு





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக